வாக்காளர்களை வறுத்தெடுத்து போஸ்டர் ஒட்டிய சுயேட்சை வேட்பாளர்
கும்பகோணத்தில் பணம் வாங்கி கொண்டு வாக்களித்த வாக்களர்களை வறுத்தெடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒட்டிய போஸ்டர்.
தேர்தல் என்பதே நல்லது செய்பவர்களை தேர்ந்தெடுக்கத்தான். ஆனால் நம் நாட்டிலோ தேர்தல் என்றால் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாகவே நாம் பார்க்கின்றோம். முன்பெல்லாம் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள்தான் பணம் வெற்றி பெற்றதும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது குறித்து யோசிப்பர். ஆனால் தற்போது நிலைமையோ தலைகீழ் ஓட்டுக்கு யார் கூடுதலாக பணம் கொடுக்கிறார்களா அவர்களுக்கே மக்கள் ஓட்டுளித்து வருகின்றனர். ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல் பணநாயகமாக மாற அரசியல் வாதிகள் மட்டும் காரணம் இல்லை. பணத்தாசை பிடித்த வாக்களர்களும்தான் காரணம். இதை நிரூபிக்கும் விதமாக கும்பகோணம் மாநகராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களை வறுத்தெடுத்து நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் "மக்களின் பணத்தை அரசியல் வாதிகள் ஊழல் செய்வதில் எள் அளவும் தவறு இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கும் ஊழலின் பிறப்பிடமான வாக்காள பெருங்குடி மக்களே, உங்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது. திருந்த வேண்டியதும் மாற வேண்டியதும் நான்தான் என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரால் கும்பகோணம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu