கண்களை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்

கண்களை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
X
விவசாயிகளிடையே பாகுபாடு மற்றும் பாரபட்சம் பார்க்காமல், அனைத்து விவசாயிகளின், அனைத்து விதமான வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூபாய் 12 ஆயிரத்தி 110 கோடியே 74 லட்சம் மதிப்பிலான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சத்தி 43 ஆயிரத்தி 347 விவசாயிகளின் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு பாரபட்சமாக நடக்காமல், தமிழகம் முழுவதும் மத்திய கால மறுகடன் பெற்ற ஆயிரக்கணக்காண விவசாயிகளின் சுமார் 450 கோடி ரூபாய் அளவிலான மத்திய கால மறுகடன், இந்த தள்ளுபடியில் இடம் பெறவில்லை, எனவே தமிழக அரசின் தள்ளுபடியில் இதனையும் சேர்த்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இந்த விவசாயிகளின் துயரை முழுமையாக போக்கும் வகையில் அனைத்து விவசாயிகளின், அனைத்து விதமான வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும் இதற்காக, கடந்த 2017ம் தேதி முன்பு வழங்கிய வேளாண் கடன் தள்ளுபடியில், பெரு விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் காந்தி பூங்கா முன்பு ஏராளமான விவசாயிகள் திரண்டு, கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story