ஆறு சிவாலயங்களில் மாசி மக கொடியேற்றம்

ஆறு சிவாலயங்களில் மாசி மக கொடியேற்றம்
X

வரும் 26ம் தேதி நடைபெறும் மாசி மக திருவிழாவிற்காக, ஆறு சிவாலயங்களில் கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. இதற்காக, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய ஆறு சிவன் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. ஆதி கும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாவுக்கு கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து, வரும் 20ம் தேதி 63 நாயன்மார் வீதியுலா, 21ம் தேதி, ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 23ம் தேதி, வெண்ணைத்தாழி, 24ம் தேதி காலை ஆதி கும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் , 25ம் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 26ம் தேதி, மகாமகம் குளத்தில், மதியம் 12.30 மணிக்கு மேல், 12:45 மணிக்குள், மாசி மக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது.

அப்போது 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சாரங்கபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் உற்சவம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil