கும்பகோணம் ரயில் நிலையம் 145வது ஆண்டு கொண்டாட்டம்
கும்பகோணம் ரயில் நிலையம் வழியாக 15.2.1877 அன்று, முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. தொடங்கி 144-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐ.எஸ்.ஓ தரசான்று பெற்றுள்ள ரயில் நிலையம், தூய்மைபணி, சிறந்த முன்பதிவு மையம் போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் இந்திய அளவில் விருதுகள் பெற்றுள்ளது. கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய காலத்தில் கும்பகோணம் வழியாக காசி, அயோத்தியா, புவனேஸ்வர், ஹைதராபாத், திருப்பதி, மைசூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. தினந்தோறும் இந்நிலையம் வழியாக 36 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேலான பயணிகள் இந்நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆண்டு டிக்கெட் வருமானமாக ரூ.23 கோடி ஈட்டி திருச்சி கோட்டத்தில் அதிக டிக்கெட் வருவாய் ஈட்டுவதில் நான்காம் இடத்தில் கும்பகோணம் உள்ளது. இந்நிலையம் ஒவ்வொரு மகாமக விழாவின் போதும் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது பயணிகளின் பாதுகாப்பினை கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் கே.ஆர்.ஆராவமுதன் கவுரவிக்கப்பட்டார். இதில், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன், அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், ரயில்வே வணிக ஆய்வாளர் தங்கமோகன், ரயில்வே பாதுகாப்பு படை உதவிஆய்வாளர் மணிமாறன், தமிழக ரயில்வே காவல்துறை உதவிஆய்வாளர் சிவராமன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சங்க இணைசெயலாளர் சுப்பிரமணியன். சங்க பொருளாளர் மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை:
தற்போது தமிழத்தில் பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டதால் கரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தில் இயக்கிய அனைத்து ரயில் வண்டிகளையும் மீண்டும் இயக்க வேண்டும்.தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை வழி ரயில் பாதை அமைக்கவேண்டும், நீடாமங்கலம்- கும்பகோணம்- விருதாச்சலம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவிததனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu