கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில், இன்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன் என் ஆர் வி எஸ் செந்தில்ஆகியோர் தலைமையில் நீதிமன்ற வளாகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு த.சின்னையன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோவி மகாலிங்கம், விவசாய அணி மாவட்ட இணைச்செயலாளர் ஐயப்பன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கமல்ராஜ் அம்மா பேரவை நகரச் செயலாளர் அயூப்கான் சோழபுரம் பேரூராட்சி செயலாளர் ஆசாத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu