எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது: கும்பகோணத்தில் சரத்குமார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் சரத்குமார், மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ராதிகா யார் என்ன வேண்டுமானாலும், பேசட்டும் ஆனால் ஒரே இலக்கு முழுமையாக நாங்கள் வந்துவிட்டோம் ஏன் சரத்குமார் முதலமைச்சராக ஆகக்கூடாதா அந்த திறமை அவருக்கு இல்லையா என அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்! எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது, தாடி கூட வைத்துள்ளேன். ஒரு சீட்டு, இரண்டு சீட்டுக்காக நான் கூட்டணி வைக்க விரும்பவில்லை எனவும், மேலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என தெரிவித்த அவர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கேட்டதற்கு மக்களுக்காகத்தான் சட்டங்கள் இருக்க வேண்டும், அவர்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தவறு இல்லை எனவும், மேலும் சட்டத்தில் உள்ள பயன்களை எடுத்து விவரமாக விவசாயிகளுக்கு சொல்ல முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu