கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டது

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில செயலாளர் அசோக்குமார், மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் துரைஜெயபால், குடந்தை மாநகர தலைவர் சங்கர், குடந்தை வடக்கு வட்டார தலைவர் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, குடந்தை தெற்கு வட்டார தலைவர் செல்வராஜ் மழவராயர், பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன், பாபநாசம் வடக்கு வட்டார தலைவர் ஜெயக்குமார், சோழன் மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுவை அளித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி