கும்பகோணம் அருகே அம்மாச்சத்திரத்தில் புதிய மின் மாற்றி திறப்பு விழா

கும்பகோணம் அருகே அம்மாச்சத்திரத்தில் புதிய மின் மாற்றி திறப்பு விழா
X

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த  அரசு  கொறடா கோ.வி.செழியன், எம்.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர்.

அம்மாச்சத்திரத்தில் புதிய மின் மாற்றியை அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் எம்பி இராமலிங்கம் ஆகியோர் இயக்கி வைத்தனர்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் அம்மாச்சத்திரம், கோகுலம் நகர், குருமூர்த்தி நகர், வேப்பத்தூர், திருவிசநல்லூர், செம்பியவரம்பல், கொத்தங்குடி, நாகரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்பி ராமலிங்கம் ஆகியோர் இயக்கி வைத்தனர். மேலும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றதை கொண்டாடும் விதமாக அம்மாச்சத்திரம் பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், ஊராட்சி செயலர் ராஜன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture