மதுக்கூரில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு மேலாண்மை கூட்டம்

மதுக்கூரில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு மேலாண்மை கூட்டம்
X

மதுக்கூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.

Farmer Meeting Today- மதுக்கூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.

Farmer Meeting Today- மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, மோகூர், விக்ரமம், வாட்டாகுடி, மூத்தா குறிச்சி, புளியக்குடி, காரப்பங்காடு, மதுர பாஷனிபுரம், அத்திவெட்டி மற்றும் கல்யாண ஓடை பஞ்சாயத்துகளில் இவ்வருடம் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து கிராம வளர்ச்சிக்கும் விவசாயிகள் தன்னிறைவு அடைவதற்கும் தேர்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து சிறப்பு மேலாண்மை கூட்டம் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், ராஜு மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களின் கலந்துரையாடலுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறிய தடுப்பணைகள், சிறிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், நீர் அமிழ்வு குட்டைகள், மண் வரப்புகள் அமைத்தல், சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணிகள், சமூக நாற்றங்கள் அமைத்தல், சாலையோரத்தில் மரங்கள் நடுதல், பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல், தொகுப்பு நிலங்களுக்கு கப்பி சாலை அமைத்தல், விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி பாதை அமைத்தல், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் திறன் மேம்பாட்டு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல், ஊரக வளர்ச்சித் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் வேளாண் பணிக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தல், தொகுப்பு நிலத்தின் வரப்புகளில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்தல், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் தானியக்கிடங்கு அமைத்தல் போன்றவைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.

வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ், தினேஷ், முருகேஷ், பூமிநாதன், ஜெரால்டு மற்றும் கார்த்திக் ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அட்மாதித்த அலுவலர்கள் ராஜூ ஐயாமணி மேலாண்மை கூட்ட உறுப்பினர்களை பதிவு செய்தனர்.

பஞ்சாயத்து செயலாளர்கள் அறிக்கை தயார் செய்து வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் வழங்கினர். காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசாணை பெற முடியும் என்பதால் சிறப்பு மேலாண்மை கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....