நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள்
விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கிய தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்திற்கு தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் நெல் திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள பெரிய கோட்டை கிராமம் தேர்வு செய்யப்பட்டு 26 விவசாயிகளுக்கு நெல் விதை, நெல் நுண்ணூட்டம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, பொட்டாஸ், மொபலைசிங் பாக்டீரியா மற்றும் சிங் சாலுயுபலைசிங் பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ உளுந்து மற்றும் நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடிக்கு தேவையான வம்பன் 8 உளுந்து விதை ரைசோபியம் பாஸ்போபேக்டீரியா மற்றும் பொட்டாஸ் மொபைலைசிங் பாக்டீரியா சூடோமோனஸ் மற்றும் பயறு நுண்ணூட்டம் உள்ளிட்ட இடுபொருட்கள் 26 விவசாயிகளுக்கு சிரமேல்குடி வேளாண் விரிவாக்கம் மையத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் வழங்கினார்.
ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்த்து உயிரினங்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சூடோமோனாஸ் எதிர்உயிரி மருந்தின் முக்கியத்துவம் போன்றவை குறித்து பெரிய கோட்டை இளமாறன் சுரேஷ் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண்மை அலுவலர் இளங்கோ ஆகியோர் பயறு நுண்ணூட்டம் மற்றும் நெல் நுண்ணூட்டச் சத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.
பெரிய கோட்டை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் ராஜா ஆகியோர் பெரிய கோட்டை விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் நெல் அறுவடை செய்யும் கருவி கைத்தளிப்பான் போன்றவைகளின் தேவைகள் பற்றி எடுத்துக் கூறினர்.
பெரிய கோட்டை வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ் இடுபொருள் வழங்குவதற்கான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu