பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய்: வேளாண் இயக்குனர் விளக்கம்

பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய்: வேளாண் இயக்குனர் விளக்கம்
X

சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட உளுந்து வயலை மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு நோயின் தன்மையை எடுத்துக் கூறினார்.

அதிகாலைப் பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மதுக்கூர் வேளாண் இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

அதிகாலைப் பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மதுக்கூர் வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.

முதலில் வெள்ளை கலர் பவுடர் போல இலையின் மேற்பகுதியில் காணப்படும் நோயின் அறிகுறி தொடர்ச்சியான அதிகாலை பனியினால் அதிகரித்து இலை முழுவதுமே சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். அடி பாகம் இந்த சாம்பல் நிற நோயானது பரவுகிறது.

இதனால் இலையின் நிறம் மங்கி அதிக பாதிக்கப்பட்ட நிலையானது சுருங்கி காயத் தொடங்கும். உரிய காலத்துக்கு முன்பு இலை மஞ்சளாகி கீழே விழுந்து விடும். சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது பயிர் தன்னை காத்துக் கொள்வதற்காக மிக விரைவாக முதிர்ச்சி அடைய தொடங்கும். இதனால் பயிரின் மகசூல் பாதிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு பொருளாதார சேதத்தை உருவாக்கும்.

மிக ஆரம்ப கட்டமாக நோயின் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மூன்று சதவீத வேப்ப எண்ணையை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம். யூகலிப்டஸ் கரைசல்10% இலை கரைசலை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஏக்கருக்கு 200 கிராம் ப்ரோபிகோனசோல் மருந்தினை 20 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் ஒரு டேங்குக்கு ஒரு லிட்டர் கரைசல் மற்றும் 9 லிட்டர் நீருடன் கலந்து இலை நனையும்படி நன்கு தெளிக்க வேண்டும்.. நோயின் தாக்குதல் குறையாத பட்சத்தில் பத்து நாள் இடைவெளியில் மீள ஒரு முறை இம்மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

எனவே தற்போது நிலவும் இரவின் கடும் குளிர் மற்றும் அதிகாலை நேர அதீத பனியினால் உளுந்து பயிரில் தோன்றும் சாம்பல் நோயினை ஏற்ற நேரத்தில் கவனித்து கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்த்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!