மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள்: எம்எல்ஏ வழங்கல்
வாட்டாகுடி நடேசன் என்பவருக்கு கேழ்வரகு விதை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்ட த்தின் கீழ் நூறு சத மானியத்தில் விவசாயிகளுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உரங்கள் வழங்கினார்.
மே மாதத்தில் மேட்டூர் அணையும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்துகொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்தில் இவ்வருடம் 1300 எக்டர் குருவை சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் முடிய 618 எக்டரில் குருவை சாகுபடி முடிந்து ஜூலை மாதத்தில் 700 எக்டர் எதிர்பார்ப்பு உள்ளது.
எனவே குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி மற்றும் 25 கிலோ பொட்டாஸ் உரமானது உழவன் செயலில் பதிவு செய்து ஆவணங்கள் சரிபார்த்த பின் அங்கீகரிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளில் மதுக்கூர் வடக்கு சொக்கனாவூர், புளியக்குடி, பழவேற்காடு, ஒலயகுன்னம் மற்றும் காரப்பங்காடு சேர்ந்த விவசாயிகள் 13 பேருக்குசட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மானியத்தில் உரத்தினை வழங்கினார்.
குருவை தொகுப்பு திட்ட மாற்று பயிர் மானியமாக வாட்டா குடியைச் சேர்ந்த நடேசன் என்பவருக்கு கேழ்வரகு பயிர் செய்திடவும், வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் என்பவருக்கு உளுந்து சாகுபடிக்கும் அத்திவெட்டி மேற்கு கிராமத்தை சேர்ந்த வைரம்பாள் என்பவருக்கு நிலக்கடலை சாகுபடிக்கும் 50% மானியத்தில் இடுபொருள்களை வழங்கினார்.
மேலும் மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொண்டார். வேளாண் பொறியியல் துறையில் இருந்து பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் செங்கோல் கலந்துகொண்டு, குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கருவிகள் அதற்கான மானியங்கள் பெறும் வழிமுறைகள் பற்றி விளக்கி கூறினார்.
விவசாயிகள் தேவையான விளக்கம் பெறும் வகையில் நுண்ணீர்பாசன திட்டத்தின் கீழ் நீர் தெளிப்பான் பவர்டில்லர், விசைத்தெளிப்பான்கள் போன்றவற்றின் விலை மற்றும் மானியம் குறித்து மன்னார்குடி ஏஜிஎஸ் இரிகேசன் பாண்டித்துரை அவர்களும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் தென்னை மரங்களுக்கு பயன்படும் விசைத்தெளிப்பான்கள் ஆயில் இன்ஜின்கள் மற்றும் சிறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையிலான மினி பவர் டில்லர் போன்றவை குறித்து நிறுவன கள அதிகாரி மதி விவசாயிகளுடன் சிறப்பாக கலந்துரையாடி விளக்கி கூறினார்.
நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ முன்னிலை வகிக்க, சொக்கநாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, காடந்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் காரப்பங்காடு பெருமாள் ஆகியோர் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், கார்த்திக், தினேஷ், முருகேஷ், சுரேஷ் மற்றும் ஜெரால்ட் மற்றும் பெரிய கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் செய்திருந்தனர். குருவை தொகுப்பு திட்ட விழாவில் அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி மற்றும் ராஜு ஆகியோர் கருத்து காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu