பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த சுற்றுலா.. பேராவூரணியில் மதுக்கூர் வட்டார விவசாயிகள்

மதுக்கூர் வட்டார விவசாயிகள் 50 பேர் பேராவூரணியில் உள்ள சீதாம்பால்புரம் கிராமத்திற்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த சுற்றுலா சென்றுள்ளனர்.
Today Thanjavur News -மதுக்கூர் வட்டார விவசாயிகள் 50 பேர் பேராவூரணியில் உள்ள சீதாம்பால்புரம் கிராமத்திற்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த சுற்றுலா சென்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு பேராவூரணி வட்டாரம் சீதாம்பால்புரம் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி சுரேஷ், 15 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் சாகுபடியை செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார். நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது.
இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது. இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது. பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும். இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.
அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி ,வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்திலையும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார்.
பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.சுகிதா பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யா மணி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை பூமிநாதன், சுரேஷ், ஜெரால்ட், முருகேஷ், தினேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம், இயற்கை பண்ணையம் குறித்த சுற்றுலா ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்திற்கு இயற்கை விவசாயி அனைத்து இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் தன்ராஜ் அவர்களது பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது பண்ணையில் தயார் செய்யப்படும் மீன் அமிலத்தினை செயல் விளக்கத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக தன்ராஜ் செய்து காண்பித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu