பிஎம் கிஸான் உதவித்தொகை பெற இ-கேஒய்சி மிகமிக அவசியம்: வேளாண் இணை இயக்குனர்
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தி நடைபெற்ற இ-கேஒய்சி பணி.
பிஎம் கிஸான் திட்டத்தில் 12லிருந்து 13 வது தவணை வரையிலான உதவித்தொகையை பெற அனைத்து விவசாயிகளும் இ-கேஒய்சி செய்வது மிக மிக அவசியம் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கூறுகையில், பிஎம் கிஸான் திட்டத்தில் விவசாயிகள் இதுவரை 12 வது தவணை வரை பெற்றுள்ளனர். விவசாயிகள் 12வது தவணை வரை பெற்றிருந்தாலும் இ-கேஒய்சி எனும் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த தவணைத் தொகை ஏற வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இ-கேஒய்சி செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை வேளாண் இயக்குனர் ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் அனைத்து வேளாண் உதவி இயக்குனர்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பிஎம் கிசான் பயனாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பொது சேவை மையத்தின் உதவியுடன் 100% இப்ப பணியை முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் துணை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், தினேஷ், ஜெரால்ட் மற்றும் முருகேஸ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜானகிராமன் மற்றும் கண்ணன் அடங்கிய குழுவினர் தஞ்சை ஆர்விஎஸ் வேளாண் கல்லூரியில் இருந்து கிராமப்புற பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள 11 மாணவர்களின் உதவியுடன் அனைத்து விவசாயிகளையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வரவழைத்து மதுக்கூர் பொது சேவை மைய தலைவர் மணிகண்டன் மூலம் 250 விவசாயிகளுக்கு இ-கேஒய்சி பணியினை முடித்துள்ளனர்.
இ-கேஒய்சி நடைபெறும் பணியை திடீர் ஆய்வு மேற்கொண்ட தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அனைத்து வேளாண் உதவி அலுவலர்களும் நாள் ஒன்றுக்கு தலா ஐம்பது பிஎம் கிசான் பயனாளிகளை இ-கேஒய்சி செய்து முடித்திட அறிவுறுத்தினார்.
எனவே மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த பிஎம் கிசான் உதவித்தொகை பெறும் அனைத்து விவசாயிகளும் இதுவரை இ-கேஒய்சி செய்ய வில்லை எனில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அவரவருடைய ஆதார் நகல் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் வருகை புரிந்து மதுக்கூர் வட்டார அங்கீகரிக்கப்பட்ட ஜெயராஜ் பொது சேவை மையத்துடன் இணைந்து நடைபெறும் முனைப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு இ கேஒய்சி பணியை முடித்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண் உதவி அலுவலர்களிடம் இருந்து தங்களுக்கு இ-கேஒய்சி செய்திட தகவல் வந்தாலும் வராவிட்டாலும் விவசாயிகள் நேரடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து இ-கேஒய்சி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இ-கேஒய்சி செய்பவர்களுக்கு மட்டுமே அடுத்த கட்ட தவணை மத்திய அரசால் வரவு வைக்கப்படும் என்பதை அனைவரும் கவனத்துடன் பரிசீலித்து உடன் இப்பணியை முடிக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார் .
பிஎம் கிசான் முனைப்பு இயக்கத்தில் ஆர்விஎஸ் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஜோதீஸ்வரன், கபிலன், காமேஷ் குமார், கார்த்திகேயன், கவிமணி, லோகமூர்த்தி, லோகேஸ்வரன், முகமது ஹக், முகமது இப்ராஹிம், முத்துமணி, முத்துவேல் உள்ளிட்ட மாணவர்கள் விவசாயிகளை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தனர்.
அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ஐயாமணி ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu