பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் வழங்கல்

பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் வழங்கல்
X

விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் வழங்கிய பாலாஜி கோட்டை ஊராட்சி தலைவர்.

பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.

பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் வேளாண் துறை மற்றும் கால்நடை துறையுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆலோசனைகளை டாக்டர் ரூபவாஹினி அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து பாலாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் பாலாஜி கோட்டை கிராமத்தை சேர்ந்த 19 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மாதிட்ட அலுவலர் ராஜு ஆகியோர் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பவர்ஸ்பிரேயர்களை வழங்கியதுடன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர்.

முன்னோடி விவசாயிகள் அடைக்கலம் ராஜேந்திரன் வடுவம்மாள் மற்றும் தீபிகா திருஞானம் உள்ளிட்ட விவசாயிகள் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!