மதுக்கூர் அருகே 350 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்
வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் கலைவாணி மற்றும் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 7 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 4 பஞ்சாயத்துகளுக்கு கிராம அளவில் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அட்மா திட்டத்தின் கீழ் காரிப் முன் பருவ பயிற்சி தல இரண்டு எண்கள் வீதம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு விவசாயிகள் அனைவரும் உழவர் அலுவலர் தொடர்பு திட்ட போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டதோடு முன்னுரிமை பதிவேடு பராமரிக்கப்பட்டு அதில் விவசாயிகளின் தேவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுக்கூர் வட்டாரத்தில் ஐந்தாவதாக பெரியகோட்டை பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் அட்மா திட்டத்தின் கீழ் காரிப் முன் பருவ பயிற்சியோடு 350 விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையில் விபரங்கள் பெற்று வேளாண் போர்டலில் பதிவு செய்ததன் அடிப்படையில் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் நாள் கூட்டத்தில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் இளங்கோ ஆடுதுறை 54 நெல் ரகத்தினை பயிர் செய்வதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சாய்வதில்லை. மேலும் குருத்துப் பூச்சி மற்றும் குலை நோய்களை தாங்கி வளரக்கூடியது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
உதவி விதை அலுவலர்கள் இளங்கோ மற்றும் பூபேஷ் விவசாயிகளுக்கான முன்னுரிமை பதிவேட்டில் மானியத்தில் தேவைப்படும் திட்ட இனங்கள் குறித்து பதிவு செய்தனர். அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு அய்யா மணி ஆகியோர் உழவன் போர்டலில் விவசாயிகளை பதிவு செய்தனர். சி சி திட்ட பணியாளர்கள் கீர்த்தி வாசன் மற்றும் இளமாறன் பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் தினேஷ் வேளாண் உபகரணங்கள் கைத்தெளிப்பார்கள் ஜிப்சம் சிங்சல்பேட் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்றும், வேளாண் துறை வழங்கும் திட்டங்களை நடைபாண்டிலேயே முழுவதுமாக பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொண்டனர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி 15 11 2023க்குள் சம்பா பயிர் காப்பீடு செய்வது பற்றியும் மானியத்தில் ஆயில் இன்ஜின் மற்றும் விதைப்பு கருவிகள் வழங்கப்படுவது குறித்தும் எடுத்துக் கூறி தமிழ்நாடு பசுமை பரவலாக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான தேக்கு, சந்தனம், மகாகனி போன்ற மரக்கன்றுகள் தேவையான அளவு தஞ்சாவூர் வனச்சரக அலுவலகத்தில் இருப்பில் உள்ளதை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் நாள் கூட்டத்தில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் வேளாண் அலுவலர் இளங்கோ வேளாண் உதவி அலுவலர் தினேஷ் முருகேஷ் ஆகியோர் 350 விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் ரூபாய் 120 மதிப்பில் 100% மானியத்தில் வழங்கினார்.
முன்னோடி விவசாயிகள் இளமாறன், கஜேந்திரன், சுரேஷ், முத்துக்குமரன் உள்ளிட்ட விவசாயிகள் கிராம முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை கோரிக்கையாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu