மதுக்கூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் இந்த நிதியாண்டில் 7 பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அட்மா திட்டத்தின் கீழ் தனிக்கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.
கால்நடைத்துறையை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர் இளவரசி மூலம் நடத்தப்பட்ட இந்த முகாமில், 60 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சத்து மாத்திரை மற்றும் உன்னி நீக்க மருந்துகள் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண்மை உதவி அலுவலர் ராமு ஆகியோர் விவசாயிகளின் திட்ட வாரியான தேவைகளை பதிவு செய்து தென்னங்கன்றுகளை வழங்கினர்.
அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் குடல் புழு நீக்க கால்நடை மருத்துவ முகாமுக்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர் . மேலும் இன்றைய தினம் 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் கலையரசன் மூலம் பதிவு செய்து 50% மானியத்தில் வழங்கப்பட்டது.
பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் முன்னுரிமைக்கு பதிவு செய்யாத விவசாயிகளை உழவர் செயலியில் பதிவு செய்து உதவினார். அட்மாதித்த அலுவலர்கள் விவசாயிகளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் அண்ணாதுரை ஜெயமணி சக்திவேல் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி, நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதன் மானிய விகிதம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் தம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu