நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜு .
வேளாண்மைத் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், நெம்மேலி கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நெம்மேலி கிராம ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் செய்திருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் மண் மாதிரியினை சேகரித்து வழங்குமாறும் மற்றும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் இடுபொருள் பதிவு செய்தல் குறித்தும், உழவன் செயலியில் உள்ள 21 விதமான பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
மேலும் வேளாண்மை துறையின் வழிகாட்டுதலின்படி தற்சமயம் நடைபெறவிருக்கும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 27.07.2023 முதல் 29.07. 2023 வரை கேர் பொறியியல் கல்லூரி வளாகம் திருச்சியில் நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கலந்து கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகளான இருளப்பன், பெரமையன், சேதுராமன், நாராயணசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தென்னங்கன்றுகள் பராமரித்தல் குறித்து விவசாயிகளிடம் கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா, மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்தும் பரிந்துரைக்கப்பட்ட உரத்தினை பயன்படுத்தி மண்வளத்தினை மேம்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ், மண் மாதிரி எவ்வாறு சேகரிக்க வேண்டும் என செயல்விளக்கத்தின் மூலம் நேரடியாக விவசாயிகளிடம் காண்பித்தார். வேளாண்மை அலுவலர் இளங்கோவன், மண் மாதிரி சேகரிக்க தேவையான ஆவண குறிப்புகள் மற்றும் உழவன் செயலில் மண்வளம் அட்டையினை தாங்களே பதிவிறக்கம் செய்தல் குறித்தும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இலவசமாக வழங்கப்படும் தென்னங்கன்றுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜு மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் ஆகியோர் விவசாயிகளை பதிவு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu