மதுக்கூர் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: எம்பி., எம்எல்ஏ திடீர் ஆய்வு
பெரியகோட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலைய பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார பெரியகோட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலைய பணிகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி அவர்களிடம் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து இருப்பில் வைக்கப்பட்டுள்ள நெல்லினை நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனடியாக மாறுதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லினை உடனடியாக காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் இருப்பில் உள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார் .
மேலும் அதிக அளவில் இருப்பில் நெல் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் ஆவண செய்வதாக தெரிவித்தார்.
நெல் கொள்முதல் நிலைய ஆய்வின்போது தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், மதுக்கூர் அட்மா திட்ட தலைவர் இளங்கோ மற்றும் பட்டுக்கோட்டை மண்டல துணை மேலாளர் ஜபர்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த மூன்று தினங்களில் பெய்த மழையினால் அறுவடை நிலையில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டதை பெரிய கோட்டை கிராமத்தில் ரங்கசாமி வயலில் பழனிமாணிக்கம் எம்பி மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட நெல் வயலில் மழையினால் ஏற்பட்ட பாதிப்பினை வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விளக்கி கூறினார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் வட்டாரத்திற்கான நெல் சாகுபடி பரப்பு மற்றும் அறுவடையில் மீதமுள்ள பரப்பு போன்றவைகள் பற்றி கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வேளாண் உதவி அலுவலர்கள் பாதிக்கப்பட்ட வயல்கள் இருக்கும் கிராமங்களை கிராம நிர்வாக அலுவலர் உடன் சென்று ஆய்வு செய்திட கூறினார். வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்கள் மாவட்ட அளவில் வேளாண் துறை அலுவலர்களால் தற்போது கள ஆய்வு மேற்கொள்ளப்படுவது பற்றி எடுத்துக் கூறினார். பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் முருகேஷ் ஜெரால்டு புளியங்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu