பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி
X

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புள்ளியல் துறை பட்டுக்கோட்டை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் அபிராமன் தலைமையில் நடைபெற்றது.

புள்ளியல் துறை சேர்ந்த மதுக்கூர் புள்ளியியல் ஆய்வாளர் கார்த்தி, பட்டுக்கோட்டை வட்டார புள்ளியல் ஆய்வாளர் சுபலட்சுமி சேது பாவ சத்திரம் புள்ளியியல் ஆய்வாளர் சியாமளாதேவி மற்றும் பட்டுக்கோட்டை புள்ளியியல் ஆய்வு அலுவலர் சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு வட்டார அளவில் பயிர் மதிப்பீட்டு வாழ்வில் கல அளவில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.

வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சேர்ந்த அனைத்து கள அலுவலர்களுக்கும் உணவு தானிய உற்பத்தி திறனை நிர்ணயிக்கும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலப்பு பயிர் மற்றும் தனி பயிர்களுக்கான பயிர் அறுவடை மகசூல் கணக்கிடும் முறைகள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளை தேர்வு செய்யும் முறைகள்குறித்து புள்ளியியல் உதவி இயக்குனர் அபிராமன் விளக்கிப் பேசினார்.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் பயிற்சி அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை மதுக்கூர் மற்றும் பேராவூரணி சேதுபாவசத்திரத்தை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

பயிற்சியில் சேதுபாவா சத்திரம் வேளாண் உதவி இயக்குனர் சாந்தி, துணை வேளாண்மை அலுவலர் மற்றும் பட்டுக்கோட்டை அப்சரா உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்களும் அனைத்து வட்டாரங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்