மதுக்கூர் வட்டார காரப்பங்காட்டில் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா

மதுக்கூர் வட்டார காரப்பங்காட்டில் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா
X

காரப்பங்காடு பஞ்சாயத்தில் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ தலைமையில் காரப்பங்காடு கிராம விவசாயிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு தென்னம்பிள்ளைகள் வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்.

மதுக்கூர் வட்டாரம் காரப்பங்காடு பஞ்சாயத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுக்கூர் வட்டாரம் காரப்பங்காடு பஞ்சாயத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பத்து பஞ்சாயத்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் இன்றைய தினம் காரப்பங்காடு பஞ்சாயத்தில் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ தலைமையில் காரப்பங்காடு கிராம விவசாயிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு தென்னம்பிள்ளைகள் வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்.

மேலும் மாண்புமிகு முதல்வரின் சிறப்பு திட்டமான நெல்லுக்கு பின் உளுந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உளுந்து விதைகளை அட்மா திட்ட தலைவர் மற்றும் காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி பெருமாள் ஆகியோர் வழங்கினர்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் நெட்டை தென்னை கன்றுகளின் சிறப்பு மற்றும் நடவு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.

தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியை சேர்ந்த பயிற்சி மாணவர்கள் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்படுத்தும் முறை பற்றி எடுத்துக் கூறியதோடு விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்குவதற்கான பதிவு பணியிலும் ஈடுபட்டனர்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா அன்புமணி ராஜு ஆகியோர் உழவன் செயலியை பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பெறும் முறை பற்றி முன்பதிவு செய்வது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமாணிக்கம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை 100% மானியத்தில் வழங்கினர்.

காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!