பிறந்து 80 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை : 2.5லட்சம் முதல்வர் நிவாரண நிதி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் தம்பதியினர் வசந்த்- அகல்யா. இத்தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வருணுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச் செய்தியை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தக் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி