புராதன சின்னங்களை பாதுகாக்க இந்திய தொல்லியல்துறை வேண்டுகோள்

புராதன சின்னங்களை பாதுகாக்க இந்திய தொல்லியல்துறை வேண்டுகோள்
X
புராதன சின்னங்களை பாதுகாத்து, அவற்றின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல இந்திய தொல்லியல் துறை வேண்டுகோள்.

புராதன சின்னங்களை பாதுகாத்து, அவற்றின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறை, கோயில் ஆய்வுத் திட்டத்தின் உதவி தொல்பொருள் ஆய்வாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கோயில் ஆய்வுத் திட்டம் (தென் மண்டலம்) சார்பில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கோயில் சிற்பக் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது என்றும், சோழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் நேரடியாக பார்ப்பதால் மாணவர்கள் இன்னும் அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் ஹிந்து நாடார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய தொல்லியல் துறை, கோயில் ஆய்வுத் திட்டத்தின் உதவி தொல்பொருள் ஆய்வாளர் பிரசன்னா சிற்பம் மற்றும் கட்டடக்கலைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த களப்பயண நிகழ்ச்சியானது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம், புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோயில், பட்டீஸ்வரம் பஞ்சவன் மகாதேவி கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், மாளிகைமேடு அகழாய்வு பகுதி உள்பட 7 இடங்களில் நடைபெறுகிறது.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!