அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு, திட்ட விளக்க கூட்டம்

அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு, திட்ட விளக்க கூட்டம்
X

விக்ரமம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற கிராம செயலாக்கக் குழு மற்றும் திட்ட விளக்க கூட்டம்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விக்ரமம், மதுக்கூர் வடக்கு மற்றும் அத்திவெட்டி ஆகிய பஞ்சாயத்துகள் வேளாண்மைத் துறையால் தேர்வு செய்யப்பட்டன.

விக்ரமம், வாடிய காடு, மதுக்கூர் வடக்கு, அத்திவெட்டி கிழக்கு, மேற்கு ஆகிய 5 வருவாய் கிராமங்களிலும் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மற்றும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் சேகரிப்பு குறித்த கிராம அளவிலான செயலாக்க குழு கூட்டம் இன்று விக்ரமம் கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 46 மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் விவசாயிகளுக்கு வேளாண் துறையின் திட்டங்கள் குறித்தும், அடிப்படை விபரங்கள் சேகரிப்பில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

விக்ரமம் ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். முன்னோடி விவசாயி பழனியப்பன், பிரபாகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் குழு உறுப்பினர்களுக்கு விவசாயிகளுக்கான படிவங்களை வழங்கினர்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் துறை மூலம் வழங்கப்படும் திட்டங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களுக்கு வழங்கப்பட உள்ள முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளின் கிராம அளவிலான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விக்ரமன் முன்னோடி விவசாயி பிரபாகர் செய்திருந்தார்.

Tags

Next Story
ai future project