அத்திவெட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம்
அத்திவெட்டி கிராமத்தில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மேலாண்மை கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அடுத்த அத்திவெட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மேலாண்மை கூட்டம் மற்றும் மண் மாதிரி எடுத்த விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அசிஸ்ட் தொண்டு நிறுவன கள அதிகாரி சின்னராசு மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.
சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் அட்மா திட்ட பணியாளர் பணியாளர் ஐயா மணி ஆகியோர் மேலாண்மை குழு உறுப்பினராக விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மானியங்கள் அதற்கான விதிமுறைகள் மற்றும் சென்னைக்கான பராமரிப்பு மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவைகளைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர்.
மேலும் இதுவரை அடிப்படை விபரம் வழங்காத விவசாயிகளுக்கு படிவங்களை வழங்கி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.
அசிஸ்ட் தொண்டு நிறுவன அருட்சகோதரி மற்றும் களப்பணியாளர் சின்னராசு ஆகியோர் அத்திவெட்டி கிராமத்தில் மண் மாதிரி கொடுத்திருந்த விவசாயிகளுக்கு ஆடுதுறை மண் ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதனைக்கு கொடுத்து பெறப்பட்ட மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
மண்வள அட்டை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவினை அறிந்து தேவைக்கேற்ப உரம் இடலாம்; உரச் செலவை குறைக்கலாம் என்பது பற்றி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் லக்கி கூறினார்.
கூட்டத்தில் இயற்கை விவசாய குழுவை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பாலசுப்பிரமணியன், வடிவேலு, மூர்த்தி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அனைத்து விவசாயிகளும் அடிப்படை விபரங்களை பதிவு செய்து தங்கள் தேவைகளை அரசிடமிருந்து எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறி கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu