பேருந்து மீது மின்கம்பி உரசியதில் 4 பேர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை நோக்கி கணநாதன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. வரகூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு சில மீட்டர் தூரம் சென்ற போது, திருக்காட்டுப்பள்ளியை நோக்கி எதிரே வந்த லாரிக்கு சாலையில் இடம் கொடுத்து பேருந்து சாலையில் இடதுபுறம் ஒதுங்கியுள்ளது. சாலை விரிவு படுத்துவதற்காக சாலை பணிகள் நடைபெறுவதால் சேறும் சகதியுமாய் இருந்ததால் சகதியில் பேருந்து உள்வாங்கியுள்ள. அப்போது சாலை ஓரமாக சென்ற உயிரழத்த மின்சார கம்பி பேருந்து மீது உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்தில் பயணம் செய்த கவிதா, நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu