பேருந்தில் மின்கம்பி உரசி விபத்து, 4 பேர் பலி

பேருந்தில் மின்கம்பி உரசி விபத்து, 4 பேர் பலி
X

தஞ்சாவூர் அருகே இன்று மதியம் தனியார் பேருந்தில் மின்கம்பி உரசியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மன்னார்குடி - தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து புறப்பட்ட இப்பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.மதியம் வரகூர் வந்த இப்பேருந்து இடது புறமாக சென்றதில் சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. அப்போது, சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது பேருந்தின் மேற்கூரை உரசியது.

இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், பேருந்தில் பயணம் செய்த நடராஜன், மாரியப்பன், கல்யாணராமன் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த 7 பேர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவஇடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!