வாசுதேவநல்லூர்: பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய சிறப்பு பிரார்த்தனை

வாசுதேவநல்லூர்: பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய சிறப்பு பிரார்த்தனை
X
வாசுதேவநல்லூர் அருகே பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய வேண்டி காவல் ஆய்வாளர் தலைமையில் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை.

வாசுதேவநல்லூர் அருகே பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வர காவல் ஆய்வாளர் தலைமையில் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பிரபல கேரள பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் சமீபத்தில் கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்னும் இடத்தில் பாம்பு பிடிக்க சென்றபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மருத்துவமனையில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வருவதற்காக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவிலில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் அவரது உருவப்படத்தை வைத்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாவா சுரேஷ் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!