புளியங்குடியில் செயலி மூலம் பணம் பறித்த கும்பல் கைது..!
பட விளக்கம்: செயலி மூலம் பணம்பரித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்திருப்பதை படத்தில் காணலாம்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புளியங்குடி சரகத்தில் காவல்துறையினர் வாகன ரோந்து சென்றனர். அப்போது புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் நிறுத்தம் பகுதியில் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையம் அருகே சென்றபோது தகராறு ஈடுபட்ட கும்பல் அவசரமாக காரில் ஏறி வேகமாக தப்பினர்.
அப்போது காரை விரட்டிச் சென்ற டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான காவல்துறையினர் காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஆறு பேருடன் காரையும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாசுதேதல்லூர் அருகே உள்ள உள்ளார் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்(19),அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கவிக்குமார்(21), அதே பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் கனகராஜ் (22) ஆகிய நான்கு பேருடன் 17 வயது இளஞ்சிரார்கள் இருவர் என்பது தெரிய வந்தது..
சிவகிரி பகுதியில் கிண்டர் ஆப் என்னும் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணம் பறித்துக் கொண்டு விரட்டியடிப்பதை இவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து எவரும் புகார் அளிக்காததால் சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்தது ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu