கரிவலம்வந்தநல்லூரில் காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது

கரிவலம்வந்தநல்லூரில் காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது
X
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.
கரிவலம்வந்தநல்லூரில் காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது 480 மதுபாட்டில்கள் கார் பறிமுதல்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மறைத்து வைத்து எடுத்து வந்த பத்து பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள், கார் ஆகிவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் முத்துக்குமார்(45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்று சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் 24 மணி நேரமும் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து காவல்துறையினரின் பாதுகாப்போடு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
மிட்நைட்டில்  சாப்பிடுகிறீர்களா..? உடல் நலத்திற்கு வரக்கூடிய  எச்சரிக்கை மணி ஒலிக்கிறது..!