போலி ஆவணம் மூலம் நிலம் மாேசடி: சிவகிரி ஜமீன், சார் பதிவாளர் மீது வழக்குபதிவு
சார்பதிவாளர் மோகன்.
ராமநாதபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜா உசேன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதற்கு உரிய தீர்வு கிடைக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிவகிரி ஜமீன் மற்றும் சிவகிரி சார்பதிவாளர் மீது நில அபகரிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
அதுகுறித்த விபரம் பின்வருமாறு:- ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜா உசேன் என்பவர் திருநெல்வேலி பைபாஸ் சாலையில் 56 செண்டு இடம் மெர்ஸி என்பவரிடமிருந்து 10.01.2011 அன்று விலைக்கு வாங்கினார். அன்று முதல் பட்டா மாற்றம் செய்து அந்த இடத்தை அனுபவித்து வந்தார். இந்த இடத்தை சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான இடம் என்று சிவகிரி சார்பதிவாளர் மோகன் 28.08.2020 அன்று போலியாக பதிவு செய்கிறார்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட பதிவாளரிடம் 23.09.2020 அன்று புகார் தெரிவித்திருந்தார். அவர் இது மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணம் என 20.07.2020 அன்று உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக ராஜாஉசேன் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு US 120 (b) 420, 468, 471 IPC & sec 84 Registration Act 1908 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகிரி ஜமீன் மற்றும் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu