மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா..!
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

தென்காசி மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு சீவல்நல்லூர் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம், சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் முத்துமாரி. இவர் மீது பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தும், இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த சீவநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் பட்டுராஜன் தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முகப்பில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களை அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

சீவநல்லூர் பஞ்சாயத்து உறுப்பினர்களின் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை புகார் மனு அளிக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பறித்து நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி விடுவிக்கவும் மாவட்ட ஆட்சியர் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?