ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
X

மாவட்ட ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் மயங்கி விழுந்தவரை மீட்டு108 - ல் அனுப்பி வைக்கும் போது எடுத்த படம்.

தென்காசி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு திடீரென மயங்கி விழுந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி - குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று இடப் பிரச்சினை சம்பந்தமாக மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்.

இந்த நிலையில், அவரை காவலர்கள் அழைத்து சென்று மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் முன்பு நிறுத்தியபோது, மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்தார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மாற்றுத்திறனாளியான மாரிமுத்துவை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் முன்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!