கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை-கலெக்டர் பேட்டி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை-கலெக்டர் பேட்டி
X

கொரோனா தடுப்பூசி மாதிரி படம்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

.தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு சித்த மருத்துவமனை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வெளி மாநில பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் மொத்தமாக 550படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 67 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 3 கல்லூரி, 1 பள்ளி என 4இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 308 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?