பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
தென்காசியில் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் மாதவன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.
தென்காசியில் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கை மறியல் போராட்டம்.
கட்டுமான சங்க மாவட்ட தலைவர் மாதவன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன் பேசினார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத பென்ஷன் ரூபாய் 3000/- வழங்கிட வேண்டும், நலவாரிய பதிவு புதுப்பித்தல் பணப் பயன்கள் பெறுவதற்கு ஆன்லைன் மற்றும் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் மூலம் நேரடியாகப் பெற வேண்டும், ஏற்கனவே புதிய நல வாரிய உறுப்பினராக பதிவு செய்த அனைவருக்கும் நலவாரிய உறுப்பினர் கார்டு உடனடியாக வழங்கப்பட வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட மத்திய மோடி அரசு கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் நலவாரிய சட்டங்களை தேவையில்லாமல் திருத்தி நல வாரியத்தை சீரழிக்க கூடாது, கட்டுமான தொழிலாளர்களின் மத்திய-மாநில சேமநல நிதியை கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளர் மாநில நலவாரிய கூட்டத்தை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கூடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழக அரசே சட்டமன்றத்தில் அறிவித்தபடி தென்காசி மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை உடனடியாக அமைத்திட வேண்டும், இயற்கை மரணம் ரூபாய் 2 லட்சம் விபத்து மரணம் ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை மாதம் ஒருமுறை நடைபெறுவதை உறுதிப்படுத்திட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத்திய அரசு தேவை இல்லாமல் கட்டுமான தொழிலாளர்களின் பயன் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்துதல் சட்டத்தை வாபஸ் வாங்கிட வேண்டும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இலவச வீட்டு மனையுடன் வீடு கட்டும் திட்டத்திற்கு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu