கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா
X

தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.

தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை பெருந்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதிஉலா, மாவிளக்கு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டம் காலை 8:30 மணிக்கு முடிவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்ட விழாவில் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்களை அகற்றினர். மேலும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!