சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை
X
சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. காவல்துறையினர் தீவிர விசாரணை.

சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. அவரது நண்பரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகணேஷ் என்பவர் கூடலூர் மலைப்பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்பகுதியாக சென்றவர்கள் வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து விஜய கணேசன் நண்பரான கோபி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதுபோதையில் இருவரும் தகராறில் ஈடுபட்டு கோபி என்பவர் விஜய கணேஷ் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!