சங்கரன்கோவில் - குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சங்கரன்கோவில் - குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
X

சங்குபுரம் தெரு பகுதிகளில்,  15 நாட்களாகியும் குடிநீர் வழங்காததால், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் சங்குபுரம் தெரு பகுதிகளில், 15 நாட்களாகியும் குடிநீர் வழங்காததால், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், கடந்த நான்கு மாதங்களாகவே சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் சங்குபுரம் நகர் பகுதி மக்களுக்கு, 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக, நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது.

சங்குபுரம் தெரு பகுதி பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளுடன், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!