உவரியில் மீனவர் பேரவை சார்பில் சுனாமி பேரலை நினைவு தினம் அனுசரிப்பு
தமிழ் நாடு மீனவர் பேரவை சார்பில் உவரியில் சுனாமி பேரலை 17 ம் ஆண்டு நினவு தினத்தை முன்னிட்டு கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உவரியில் மீனவர் பேரவை சார்பில் சுனாமி பேரலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழ் நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமி பேரலை 17 ம் ஆண்டு நினைவு தினம் மாநில செயலாளர் உவரி ஆல்ட்ரின் தலைமையில் நெல்லை மாவட்ட தலைவர் மானக் ஷா முன்னிலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக உவரி.பங்கு தந்தை அருட்திரு டொமினிக் கலந்து கொண்டார்.
முன்னதாக அனைவரும் வேளாங்கண்ணி மாதா ஆலயம் அருகில் இருந்து கடற்கரைக்கு பால்மற்றும் பூக்கள் இவைகளுடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அங்கு பங்கு தந்தை ஜெபம் செய்த பின்னர் பேரவை நிர்வாகிகள், பங்கு தந்தை, உவரி காவல்துறை ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் பாஸ்கர், மற்றும் பொதுமக்கள் சுனாமியால் இறந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றி மலர் தூவினர்.
நிகழ்ச்சியில் மீனவர் பேரவை நெல்லை மாவட்ட செயலாளர் இடிந்தகரை எஸ்..பிரபு, இராதா புரம் ஒன்றிய செயலாளர் ஆர். திவாகர், இராதாபுரம் ஒன்றிய துணை தலைவர் எஸ்.முருகேசன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஜி.ததேயூஸ், நாங்குநேரி ஒன்றிய துணை செயலாளர் டி.பிரபு, உவரி அச்சிட், இங்கர்சால், எழில் பாரதா, இளைஞரணி டாப்ரின், ராஜா, அர்னால்ட் பாரதா, ரூஸ்வெல்ட், கூடுதாழை டென்சில்,உவரி புனித்,பெரியதாழை பிரபு , கென்ஸ்ட்டன்,மகளிரணி,உவரி ஆஷா ,டெல்வின், ஜெயந்தி, ப்ளவர், வளர்மதி, மலர், வான்மதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu