ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் நடைபெற இருக்ககூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களாக பங்கு பெறும் அரசு அலுலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சங்கரன்கோவிலில் இரண்டு பகுதிகளாக நடைப்பெற்று வருகிறது ..தடுப்பூசி போடாதவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறும் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ..
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை முடிவடைந்திருக்கிறது... மேலும் இன்று நடைபெறக்கூடிய தேர்தலில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தி இருக்கிறது. இந்த வாக்குச்சீட்டுகள் ஒரு வாக்காளர் 4 ஓட்டுகளை செலுத்துவார்கள்
தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 10 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் நடக்கும் பணியில் ஈடுபடக் கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும் வாக்குச்சாவடிகளில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டியவை மற்றும் வாக்குகளை செலுத்துபவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பயிற்சி வகுப்புகளில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகளில் இருக்கக்கூடிய பணியாளர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu