கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல்

கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல்
X

சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்,புளியங்குடி,சிந்தாமணி, சுப்புலாபுரம், அத்திப்பட்டி,குருவிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10,000 மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.இதில் பசை போடுதல், பாவு போடுதல், டப்பா போடுதல், கண்டுபோடுதல், பார்சல் போடுதல் என விசைத்தறித் தொடர்பான தொழிலில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 2 தறி 3 தறி வைத்திருக்கும் சிறு விசைத்தறியாளர்களும் அடங்குவர்.இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சிறு விசைத்தறியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஜூன் மாதம் கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தொழிலாளர்கள் மற்றும் சிறு விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்கவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 4.12.2020அன்று கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள்,சிறு விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நாள் போராட்டத்திற்கு பிறகு நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர் ஒவ்வொரு வருடமும் 10 சதவீத கூலி உயர்வு என்ற அடிப்படையில் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு 25.05.2021 அன்று கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இதுவரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை.

இந்நிலையில் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி சங்கரன்கோவில் புளியங்குடி சிந்தாமணி சுப்புலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக லட்சுமியாபுரம் தெருவில் குவிந்தனர்.இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் மறியல் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் திட்டமிட்டபடி பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail