சங்கரன்கோவில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை : போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை : போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட பீரோ திறந்து சிதறி கிடக்கிறது.

சங்கரன்கோவில் அருகே ஆடு மேய்ப்பவர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி ( 55 ),ஆடு மேய்க்கும் தொழிலாளி.

வேலுச்சாமி சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆடு மேய்த்து விட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோவில் இருந்த இரண்டு லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ai marketing future