பணகுடி பகுதி கோவில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பணகுடி பகுதி கோவில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

கொள்ளையடிக்கப்பட்ட கோவில்களில் மோப்ப நாய் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணகுடி பகுதி கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பணகுடி அருகிலுள்ள வடலிவிளை மற்றும் கலந்தபனை பத்ரகாளி அம்மன் மற்றும் அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

நெல்லை மாவட்டம் பணகுடி மற்றும் வடலிவிளை, சுப்ரமணியபுரம் கலந்தபனையிலுள்ள பத்ரகாளி அம்மன் கோவில்களில் நள்ளிரவில் உண்டியல்களை உடைத்து கோவிலிலுள்ள சுமார் 5 பவுன் நகையினையும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. வழக்கம் போல காலையில் பூஜை செய்வதற்காக சென்ற பூசாரி கோவில் உண்டியல் மற்றும் நகை திருட்டு சென்றதை கன்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தெரிவித்த தகவலின் பேரில் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர்.

நெல்லையிலிருந்து மோப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டு கோவில்களின் முன் பகுதியிலிருந்து சிறிது தூரம் ஓடிய பின்பு மீண்டும் கோவில் முன்பாக வந்து நின்றது. ஒரே நேரத்தில் 3 அம்மன் கோவில்களை குறி வைத்து திருட்டு சென்றிருப்பது பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சென்ற பணம் 30000 மற்றும் நகையின் மதிப்பு ரூபாய் 1 லட்சம் இருக்குமென போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் கலந்தபனையில் திருட்டில் ஈடுபட்ட போது அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்