கோவில்பட்டியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவில்பட்டியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கோவில்பட்டியில் விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில் விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல், விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில் விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா விருந்தகம் மாநில தலைவர் புஸ்லி ஆனந்த் தலைமையில் சென்னையிலிருந்து காணொலி மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஜே.பில்லாஜெகன் தலைமையில் மாவட்ட செயலாளர் சுமன்ஜிசுமன்சன், கிளஸ்டன், அக்னல், ஓட்டப்பிடாரம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா, இளைஞரணி செயலாளர் அனிட்டன் ஆகியோர் முன்னிலையில் .கோவில்பட்டி நகர தலைவர் சுரேஷ் சத்யா, செயலாளர் செண்பகராஜ், பொருளாளர் மாரிச்சாமி, மாவட்ட மகளிரணி செல்வி, நகர மகளிரணி சத்யா, நகர துணைத்தலைவர் அசோக்குமார், துணைச் செயலாளர் ரமேஷ், இணைச் செயலாளர்கள் அன்புநிதி, வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் விலையில்லா விருந்தகம் மாவட்ட தலைவர் பில்லாஜெகன் வழங்கினார். அனைத்து மன்ற பொறுப்பாளர் செல்வின் சுந்தர் நன்றி கூறினார். முன்னதாக கோவில்பட்டி நகர தலைவராக செயல்பட்டு வந்த பழனிக்குமாரை அப்பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாகவும், அவரிடம் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பில்லாஜெகன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!