தோட்டக்கலை சார்பில் ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டம் தொடக்க விழா

தோட்டக்கலை சார்பில் ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டம் தொடக்க விழா
X

ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ தொடக்க விழா தென்காசி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து நடைபெற்றது

ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ தொடக்க விழா தென்காசி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து நடைபெற்றது

தோட்டக்கலை சார்பில் ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ தொடக்க விழா

தென்காசி மாவட்டம்‌ தோட்டக்கலை - மலைப்பயிர்கள்‌ துறை சார்பில் தமிழக முதலமைச்சரின்‌ ஊட்டம்‌ தரும்‌ காய்கறித்‌ தோட்டம்‌ மற்றும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ தொடக்க விழா தென்காசி, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து நடைபெற்றது.

தோட்டக்கலை மலைப்பயிர்கள்‌ துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்‌ சு. ஜெயபாரதி மாலதி வரவேற்புரையாற்றினார். மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இரா.ஜனனி செளந்தர்யா தலைமை உரையாற்றினார்., ஊட்டம்‌ தரும்‌ காய்கறி விதைகள்‌ மற்றும்‌ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டசத்து தளைகள் வழங்கி சங்கரன்கோவில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ ஈ.ராஜா பேரூரையாற்றினார். நடவுப்பொருள் தோட்டக்கலை உதவி இயக்குநர் ப.ராஜா நன்றியுரை ஆற்றினார்.

தோட்டக்கலை மலைப்பயிர்கள்‌ துணையின்‌ கீழ்‌ பல்வேறு திட்டங்கள்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பயண்பெறும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்‌ தொடர்ச்சியாக தமிழகத்தின்‌ கிராம மற்றும்‌ நகர்ப்புறங்களில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ தங்களின்‌ விட்டுத்தோட்டங்கள்‌ மற்றும்‌ மாடிப்பருதிகளில்‌ காய்கறிகள்‌, பழங்கள்‌ மற்றும்‌ மூஸிகைப்பயிர்கள்‌ பயிரிட்டு பயன்பெறும்‌ விதமாக தமிழக முதலமைச்சரின்‌ ஊட்டம்‌ தரும்‌ காய்கறி தோட்டம்‌ மற்றும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில்‌ மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ பற்றிய அறிவிப்புகள்‌ 2021-22 ஆண்டிற்கான வேளாண்‌ மற்றும்‌ உழவர்‌ நலத்துறை நிதிநிலை அறிக்கையில்‌ வெளியிடப்பட்டன.

தமிழக முதலமைச்சரின்‌ ஊட்டம்‌ தரும்‌ காய்கறி தோட்டம்‌ நகரப்பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ பயண்பெறும்‌ வகையில்‌ ரூ.2.875 லட்சம்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட உள்ளது. மாடித்தோட்டம்‌ அமைக்க தேவையான இடுபொருட்கள்‌ கீழ்கண்டவாறு கொடுக்கப்பட உள்ளது.

1. 6 வகை காய்கறி விதைகள்‌, 2. செடி வளர்க்கும்‌ பைகள்‌ - 6 எண்கள்‌, 3. இரண்டு கிலோ தென்னை நார் கட்டிகள்‌ - 6 எண்ணம்‌, 4. உயிர்‌ உரங்கள்‌ - 400 கிராம்‌, 5. உயிரி கட்டுப்பாட்டு காரணிகள்‌- 200 கிராம்‌ 6. இயற்கை பூச்சிக்கொல்லி - 100 மில்லி.

ரூ.500 மதிப்புடைய பொருட்கள்‌ ரூ.225க்கு மானிய விலையில்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌ நகரப்பகுதிகளில்‌ உள்ள 500 இல்லத்தரசிகள்‌ பயன்பெற உள்ளனர்‌. ஊரகப்பகுதிகளில்‌ உள்ள விவசாயிகள்‌, நிலமற்ற விவசாயத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ காய்கறி தோட்டம்‌ அமைத்து தங்களின்‌ அன்றாட உணவில்‌ சுத்தான காய்கறிகளை உண்ணும்‌ வகையில்‌ கத்தரி, மிளகாய்‌, வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கண்‌, புடலை. பாகல்‌, சுரைக்காய்‌, கொத்தவரை, சாம்பல்‌ பூசணி, கீரைகள்‌ அடங்கிய 12 வகை காய்கறி விதை தளைகள்‌ மாணிய விலையில்‌ வழங்கப்படும்‌. நடப்பாண்டு இத்திட்டம்‌ ரூ. 1.80 இலட்சம்‌ செலவில்‌ 40௦௦ எண்கள்‌ ஊரகப்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட உள்ளது.

"உணவே மருந்து" என்ற கூற்றின்‌ படி மக்களின்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு நோயிலிருந்து பாதுகாத்துக்‌ கொள்ள மூலிகைச்‌ செடிகள்‌ மற்றும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகளான பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, 3 திப்பிலி. கற்பூரவள்ளி, கற்றாழை மற்றும்‌ புதினா ஆகிய 8 செடிகள்‌ கொண்ட ஊட்டச்சத்து தளைகள்‌ மானிய விலையில்‌ வழங்கப்படும்‌. நடப்பாண்டு இத்திட்டம்‌ ரூ.3.75 இட்சம் செலவில் 6000 ஊரகப்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ செயல் படுத்தப்படஉள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare