பனைமரங்கள் பாதுகாக்க நடவடிக்கை:இந்திய நாடார்கள் பேரமைப்பு பாராட்டு

பனைமரங்கள் பாதுகாக்க நடவடிக்கை:இந்திய நாடார்கள் பேரமைப்பு பாராட்டு
X

புளியங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார், இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநிலத்தலைவர் ராகம் செந்தரபாண்டியன் 

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் உள்ள செண்பகவல்லி அணை கட்டை சரி செய்ய வேண்டும், கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும்

பனை மரத்தினை பாதுகாக்கும் வகையிலும் அதனை சார்ந்து வாழும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதை இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் வரவேற்பதாக தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் இந்திய நாடார்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற, ராகம் சௌந்தரபாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதவது : பனை மரத்தையும், பனைகளையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது வரவேற்கத்தக்கது.

பனை மரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிகளை, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டை சரி செய்ய வேண்டும். பனை மரங்கள் மூலம் கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும். பனைத் தொழிலாளர்களை பாதுகாக்க கூடிய கடமை தற்போதைய அரசுக்கு இருக்கிறது. பனை மரத்தினை பாதுகாக்கும் வகையில் பனை மரங்களை வெட்ட வேண்டும், என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விஷயம் வரவேற்கத்தக்கது என்றார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்