கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X
சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வை அமுல்படுத்த கோரி கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 10 சதவீத கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி கடந்த 20ஆம் தேதி முதல் தொடர்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை.சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. கூலி உயர்வை அமுல்படுத்த கோரி கடந்த 23ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் இன்று லட்சுமியாபுரம் தெருவிலிருந்து ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி விசைத்தறி தொழிலாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தயாராயினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிற்சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு வருவாய்த்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று விசைத்தறி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். பேச்சு வார்த்தை முடியும் வரை தாங்கள் காத்திருப்பதாக தொழிலாளர் கூறியதால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்சுமியாபுரம் தெருவில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் தொழிற்சங்கத்தினர் மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்