நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை கட்டுபடுத்தவும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை கண்டித்தும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை கட்டுபடுத்தவும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம், சம்சிகாபுரம் ஆகிய பகுதிகளில் பத்தயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நூல் விலை உயர்வு மற்றும் ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியினால் விசைத்தறி தொழில் நலிவடையும் சூழல் உருவாகி வருகிறது.

எனவே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நூல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என சங்கரன்கோவில் செங்குந்த முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!