குண்டும் குழியுமான சாலை: தடுமாறி கடைக்குள் புகுந்த அரசு பேருந்து
குண்டும் குழியுமான ரோட்டால், விபத்துக்குள்ளான பேருந்து.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் - நெல்லை செல்லும் சாலை, கச்சேரி ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் சரிவர மூடப்படவில்லை. இதனால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அப்பகுதியாக வாகனங்கள் அனைத்தும் மிகுந்த சிரமத்துடன் வர வேண்டியுள்ளது. சில நேரங்களில் விபத்தும் நேரிடுகிறது.
இந்த நிலையில், அரசு பேருந்து ஒன்று, ரோட்டின் குழியில் இறங்கி மெதுவாக குலுங்கி, குலுங்கி வரும் போது நிலை தடுமாறியது, திடீரென அரசு பேருந்தின் சக்கர அச்சு முறிந்து, ரோட்டோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அந்த நேரத்தில் கடை பூட்டப்பட்டு இருந்ததால், விபத்தும், சேதமும் தவிர்க்கப்பட்டது. இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம், இதே சாலையில் நடந்து சென்ற நபர் மீது லாரி ஏறியதில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். இது போன்ற தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருவதால், போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu