கூட்டணி முறிவால் பாஜகவிற்கு எந்த நஷ்டமும் இல்லை: எச். ராஜா
சங்கரன் கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபாஜக மூத்த தலைவர் எச் ராஜா
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் பாஜ. ராஜா வருகை தந்தார். அப்பொழுது தனியார் விடுதியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அதிமுக பாஜக-வை நீக்கவில்லை என்றும் பாஜக-வில் இருந்து தான் அதிமுக விலகி உள்ளது எனவும்,அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி சண்டையை தீர்த்து வைத்தது பாஜகதான். பத்து நபர்கள் பட்டாசு வெடிப்பதற்கு இருந்தால் கூட்டணியை உண்டாக்கவும் செய்யலாம் அதில் இருந்து வெளியேறவும் செய்யலாம்.
இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாமல் 20% வாக்குகளை பெற்ற இயக்கம் பாரதிய ஜனதா கட்சி எனவும்,பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக கூட்டணி முறிவால் நஷ்டம் எதுவும் இல்லை.
கூட்டணி என்பது பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக என்றும் அதை தவிர கொள்கை ரீதியாக சம்பந்தம் ஒன்றும் கிடையாது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இனிமேல் அது இருக்காது.
மேலும், நெல்லிக்காய் மூட்டைகளாக சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக என்பதை அதன் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. பாஜக ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டைதான்.. இபிஎஸ் தற்போது பொறுப்பில் இருக்கிறார் என்றால், அதற்கு பாஜக தான் காரணம். செய்த நன்றியை இபிஎஸ் மறந்துவிட்டார்.
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருப்பதாகவும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக தற்போது எங்கே இருக்கிறது. அதிமுக இன்றுடன் முடிந்தது.நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை இபிஎஸ் போட்டு உடைத்தாண்டி என்று பாடலை உதாராணமாகக் கொள்ளலாம். நாளைக்குள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மேலும் வலுப்பெற்றது என்ற செய்தி வரும் என்றார் பாஜ. ராஜா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu